பிறந்து 46 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலேயே இந்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிசு கொவிட் 19 நியுமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த சிசுவின் உடல் பொரளை மயானத்தில் எரிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 8 ஆம் திகதி பிறந்து 20 நாட்களேயான சிசுவொகன்று லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி காணப்படுவதாக சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.