யுக்திய – நடவடிக்கை – 822 பேர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டயுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின்அடிப்படையில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 811 ஆண்களும் 11 பெண்களும் காணப்படுவதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்களில் 32 பேர் பொலிஸ் தடுப்பு காவலில்வைக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் 304 கிராம் 623 மில்லிகிராம் ஹெரோயின், 495 கிராம் 52 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 3,884 கிராம் 847 மில்லிகிராம் கஞ்சா, 4,391 கஞ்சா செடிகள் மற்றும் 340 போதை மாத்திரைகள் என்பனகைப்பற்றப்பட்டுள்ளன.

Share this Article