நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நாட்டில் இன்று இரவு 8.30 மணிவரையான நிலவரத்தின் அடிப்படையில் மேலும் 668 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட- பேலியகொட மற்றும் சிறைச்சாலைகள் கோரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டியது.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 41 ஆயிரத்து 48 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 ஆயிரத்து 701 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 187 பேர் உயிரிழந்துள்ளனர்.