பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டு, பல்கலைக்கழக சேர்க்கை கையேடு ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இம்முறை அச்சிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Article