இலங்கை வரும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் நாளை முதல் 19 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

Share this Article