34 வருடங்களின் பின் இன்று திறக்கப்பட்ட வீதி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலானவீதி 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக இன்று (நவம்பர் 01) காலை ஆறு மணிமுதல்  அனுமதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்துவயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான1.25 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி வடக்கு மாகாண ஆளுநர்நாகலிங்கம் வேதநாயகனின் அனுமதிக்கமைய மக்கள் பாவனைக்குதிறந்துவிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் இருந்த வீதித்தடைகள் இன்று காலை முதல்இராணுவத்தினரால் விலக்கப்பட்டது.

Share this Article