எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் 33 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்காக பல்கலைக்கழகங்களில் வெளியேறிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்ளீர்ப்பது தொடர்பாகவும், அவர்களை மாகாண மட்டங்களில் நியமிக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிமாக தேசிய கல்வியியல் கல்லூரிகள் ஊடாக ஆசிரியர் டிப்ளோமா பெற்ற 7 ஆயிரத்து 500 பேருக்கு ஏப்ரல் மாதம் நியமனம் வழங்குவது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரி பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் வெளியாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.