27.12.2024 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி வானிலை அவதானிப்பு.
இந்தோனேஷியாவின் பண்டா அச்சே தீவுகளுக்கு மேற்காக காற்றுச் சுழற்சிஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேற்கு திசை நோக்கிநகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எதிர்வரும் 30.12.2024 அன்று இலங்கையின் தென் கிழக்கு பகுதியைஅண்மித்து இலங்கையின் கீழாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளுக்கு கீழே தெற்கு இந்துசமுத்திரத்தில் ஒரு புயலும் ஒரு தாழமுக்கமும் அருகருகாக ஒரே அகலக்கோடுகளில் நிலவுவதால் மேலே குறிப்பிட்ட காற்றுச் சுழற்சி தீவிரமாகவலுவடையாது. ஆகவே இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்டநாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது( தற்போதையநிலையில்).
ஆனால் இதன் காரணமாக 27.12.2024 முதல் எதிர்வரும் 02.01.2025 வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்றுகனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை 29.12.2024 முதல் இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்குகடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள்குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்வதைதவிர்ப்பது சிறந்தது. வடக்கு கடற்பகுதிகளும் மேற்குறிப்பிட்ட நாட்களில் சற்றுகொந்தளிப்பான நிலையில் காணப்படும். ஆகவே மேற்கூறிய நாட்களில் வடக்குமீனவர்களும் அவதானமாக இருப்பது அவசியம்.