சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் புதுக்குடியிருப்பு சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து புகைத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தை முன்னெடுத்தன.
புகைத்தல் ஒழிப்பு செற்றிட்டத்துக்கான தொனிப்பொருளாக அரசாங்கம் ‘உருவமற்ற சிகரெட் பெட்டிகளை அமுல்படுத்தல்’ நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கை புதுக்குடியிருப்பு சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி ம.கெங்காதீஸ்வரன் தலைமையில் புதுக்குடியிருப்பு சந்தியில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் புகை பிடிப்பதனால் மது பாவனையால் நாளொன்றுக்கு 60 பேர் மரணிக்கின்றனர். வருடமொன்றுக்கு இதனால் மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 ஆயும்.