2026 ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2026 – ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரைநீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சுதெரிவித்துள்ளது.

தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்தசீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை 30 நிமிடங்கள் அதிகரிப்புடன் நீட்டிக்கப்படவுள்ளது.   

இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள்எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியைவழங்கியுள்ளது.

இந்த கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமேவடிவமைப்பதாகவும், தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும் கல்விஅமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார். 

தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீட்டிக்கமுன்மொழிந்த நிலையில், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படிசெயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய கொள்கைகளை மாற்றமுடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்தநடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்பட்டுள்ளது.

எனவே, பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அதுஅடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும், என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Share this Article