2026 ஆம் ஆண்டிற்கான லோன்லி பிளானட் பட்டியலில் யாழ்ப்பாணம் இடம்பிடித்தது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உலகப்புகழ்பெற்ற பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet) நிறுவனம், 2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட வேண்டிய சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை தெரிவு செய்துள்ளது.

இலங்கையின் செழுமையான கலாச்சாரம், வரலாற்று மரபுகள் மற்றும் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தைஅடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மேலும், சுற்றுலா துறையின் பிராந்திய பன்முகத்தன்மையை ஊக்குவிக்க இலங்கை மேற்கொண்டு வரும் நீடித்த முயற்சிகளின் வெளிப்பாடாக இதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் பல முக்கிய சுற்றுலா இடங்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் இடம்பெற்றிருப்பது, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கான முக்கியமான சாதனையாகவும் மைல்கல்லாகவும்பார்க்கப்படுகிறது.

1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லோன்லி பிளானட், உலகளாவிய அளவில் மிகுந்த நம்பிக்கையுடன் வாசிக்கப்படும் பயண வழிகாட்டி பிராண்டாக திகழ்கிறது. இதுவரை 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றதுடன், விரிவான டிஜிட்டல் தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோன்லி பிளானட்டின் அறிவிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்கள் பின்வருமாறு:

பெரு (தென் அமெரிக்கா)
யாழ்ப்பாணம் (இலங்கை)
மெயின் (அமெரிக்கா)
காடிஸ் (ஸ்பெயின்)
ரீயூனியன் (ஆப்பிரிக்கா)
போட்ஸ்வானா (ஆப்பிரிக்கா)
கார்டஜீனா (கொலம்பியா)
பின்லாந்து (ஐரோப்பா)
டிப்பரரி (அயர்லாந்து)
மெக்சிகோ நகரம்
கெட்சால்டெனாங்கோ (குவாத்தமாலா)
பிரிட்டிஷ் கொலம்பியா (கனடா)
சார்டினியா (இத்தாலி)
லிபர்டேட் (சாவ் பாவ்லோ)
யூட்ரெக்ட் (நெதர்லாந்து)
பார்படாஸ் (கரீபியன்)
ஜெஜு-டோ (தென் கொரியா)
வடக்குத் தீவு (நியூசிலாந்து)
தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா (வடக்கு டகோட்டா)
குய் நோன் (வியட்நாம்)
சீம் ரீப் (கம்போடியா)
பூக்கெட் (தாய்லாந்து)
இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக் (தென் ஆஸ்திரேலியா)
துனிசியா (ஆப்பிரிக்கா)
சாலமன் தீவுகள் (ஓசியானியா)

Share this Article