2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்புஅமுல்படுத்தப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதிஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்றஉபகுழுவின் கூட்டம் நேற்று (ஒக்.22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குபதிலளித்த பிரமர்,

2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரேபாடத்திட்ட அமைப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

முன்பள்ளி கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நிறைவுசெய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 19,000 முன்பள்ளிஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம்திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான ஆசிரியர் பயிற்சிகள்நடத்தப்படவுள்ளதுடன், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி கற்பித்தல்நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்பதுடன், பாடசாலைகளைஒன்றிணைத்து மேம்படுத்துவது தற்போது அரசாங்கத்தின் கொள்கையாகும்எனவும் குறிப்பிட்டார். இது கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்துசிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டதுஎனவும் அவர் தெரிவித்தார்.

Share this Article