2026ஆம் கல்வியாண்டில் அரசுப் பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களை சேர்ப்பதற்கான செயல்முறை தொடர்பான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சு மேலும் தெரிவித்ததாவது:
தரம் 1 இல் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மற்றும் சட்டபூர்வ பாதுகாவலர்கள், கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களையும் பின்பற்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
வழிமுறைகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.