2025 செப்டம்பர் 30 இன்கு முன் வரியை செலுத்துங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரிசெலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர்செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரிசெலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும்.

வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின்எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர்செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவுஉத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்களாகக் கருதப்படும்என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரியைச் செலுத்தாமல் விடுதல் அல்லது தாமதமாகச் செலுத்துதல்ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் ஆகியவை தள்ளுபடிசெய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் வலியுறுத்தியுள்ளது

Share this Article