2025ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாளை நீட்டித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை ஓகஸ்ட் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
2024ஆம் ஆண்டு மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், முன்னதாக விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களும் இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், இந்த விண்ணப்ப அவகாசம் எந்தவொரு சூழ்நிலையிலும் மீண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.