2025 இல் மாணவர்களுக்குரிய சீருடைத் துணியினை சீன அரசாங்கமே வழங்கும் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத்துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாகஇலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும்குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

சீன அரசாங்கம் 2023ஆம் ஆண்டு இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக70 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளையும் 2024ஆம் ஆண்டில் 80 சதவீதபாடசாலை சீருடைத் துணிகளையும் நன்கொடையாக வழங்கியதாகவும், அந்தத்தொகையை 2025ஆம் ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க சீனாதீர்மானித்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார். வருட இறுதிக்குள் 3 பிரிவுகளின் கீழ் இதனை வழங்க எதிர்பார்ப்பதாகவும் சீனா, இலங்கையின்உண்மையான நண்பனெனவும், நல்லதொரு பங்காளியெனவும் தற்போதையஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பலமான தலைமைத்துவத்தின் கீழ்இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த புலமைப்பரிசில் திட்டம் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போதுஇலங்கையில் 20 பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறைந்தவருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில்இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர்மேலும் தெரிவித்துள்ளார்

Share this Article