2025 இன் கடைசி முழு சந்திர கிரகணம் !

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் அரிய வகை முழு சந்திர கிரணம் எதிர்வரும்செப்டம்பர் 7 ஆம் திகதி வானில் தென்படவுள்ளது. இது இந்த ஆண்டின் கடைசிமுழு சந்திர கிரகணமாகும்.

குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும்தெரிவிக்கப்படுகின்றது.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தைபார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல்அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின்பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்கமுடியும்.

செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பெரும் வாய்ப்பாகஅமைந்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல்துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின்பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின்தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும்பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரேநேர்கோட்டில் வரும்.

அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால்சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு,

கிரகணம் ஆரம்பம் – இரவு 8:58 (செப்டம்பர் 7)

பகுதி கிரகணம் ஆரம்பம் – இரவு 9:57

முழுமையான கிரகணம் – இரவு 11:01

அதிகபட்ச கிரகணம் – நள்ளிரவு 11:42

கங்கண கிரகணம் முடிவு – அதிகாலை 12:22 (செப்டம்பர் 8)

பகுதி கிரகணம் முடிவு – அதிகாலை 1:26

கிரகணம் முடிவு – அதிகாலை 2:25

Share this Article