2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.
இதற்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என ரோஹன திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இளங்கலை கல்விப் பட்டம், இளங்கலை அறிவியல் பட்டம், ஒருங்கிணைந்த வருடாந்த வளர்ச்சி விகிதம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆகியவை அதன் உள்ளடக்கங்களில் உள்ளதாக அவர் கூறினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்களின் அனுமதியை பெற்றதன் பின்னர் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதன் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.