2024 பொதுத் தேர்தல் – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024 பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும்சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நாடு முழுவதும்ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்போட்டியிடுவதற்காக மொத்தம் 46 பேரின் வேட்புமனுக்கள்அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 28 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களின்வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கொழும்பு மாவட்டத்துக்குபொறுப்பான தேர்தல் அதிகாரி பிரசன்ன ஜனக குமார தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று மதியம் 12.00 மணியுடன் நிறைவடைந்தது, நாடாளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Share this Article