2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. (உயர்தர) பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (ஆகஸ்ட் 07) வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களுடைய பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, www.doenets.lkஅல்லது www.results.exams.gov.lk என்ற இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இந்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அல்லது முந்தைய காலக்கெடுவில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நள்ளிரவு 12.00 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ் இந்திகா குமார லியனகே தெரிவித்துள்ளார்.