2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை – மீள்பரிசீலனை காலம் நீடிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர (A/L) பரீட்சையின் முடிவுகளை மீள்பரிசீலனை செய்ய விண்ணப்பிக்க முடியாதவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின், பரீட்சைத் திணைக்களம் இந்த விண்ணப்பிக்க முடியக் கூடிய காலக்கெடுவை நீட்டிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, மீள்பரிசீலனைக்கு விண்ணப்பங்களை வரும் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இணையவழியாக சமர்ப்பிக்கலாம் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்கும் முறைகள்:

  1. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம்:
    🔗 https://www.doenets.lk
    “Our Services” பகுதியின் கீழ் உள்ள “Exam Information Centre” ஐ தெரிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.

  2. பரீட்சைத் திணைக்களத்தின் மொபைல் செயலி (DOE App) மூலம் “Exam Information Centre” என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

  3. மற்றொரு இணையதளம்:
    🔗 https://onlineexams.gov.lk/eic

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மறுமுறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள், விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்:

📞 இணையவழி கிளை: 011-3661122 / 011-3671568
📞 பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை: 011-2785231 / 011-2785681

Share this Article