2023 ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று; இந்தியாவை எதிர்கொள்கிறது இலங்கை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2023 ஆம் ஆண்டு ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி  கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் இன்று (17 செப்டம்பர்) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியன் இலங்கை அணி மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கடந்த மாதம் 30 ஆம் திகதி 6 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம்  ஆண்டிற்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது.

ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் முதல் சுற்றில் வெளியேறியதுடன், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இரண்டாம்  சுற்றுக்கு தகுதி பெற்றன.

சுப்பர் 4 சுற்றில்  பங்குபற்றிய முதல் இரண்டு ​ போட்டிகளில் வெற்றி  பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன் பின்னர் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில்  2 விக்கெட்களால் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆசியக்கிண்ண வரலாற்றில் இந்தியா 7 தடவைகள் கிண்ணத்தை கைப்பாற்றியுள்ளது. இலங்கை அணி 6 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

Share this Article