இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது.
மினுவாங்கொடை, பேலியகொடை இரட்டைக் கொத்தணி தொற்று பரம்பல் ஏற்பட்டதன் பிற்பாடு தொற்று எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்த 7 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட வர்களாவர். இயைடுத்தே இந்த எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் நாட்டில் இதுவரை 297 பேர் உயிரிழந்தனர். இதில், 284 மரணங்கள் இரண்டாம் அலை ஆரம்பமானதை தொடர்ந்து ஏற்பட்ட மரணங்களாகும் என கொவிட் 19 பர வலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாம் அலையில் பதிவான மரணங்களில் 200 பேர் 60 வயதிற்கும் அதிகமா னோர் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நடுத்தர வயதுடைய 72 பேரும் கொவிட் தொற்றுக்கு உயிரிழந்தனர். 31 முதல் 40 வயதிற்குட்பட்ட 6 பேரும் 10 முதல் 30 வயதிற்குட்பட்ட 5 பேரும் 10 வயதுக்கு குறைவான ஒரு கொவிட் மரணமும் பதிவாகியுள்ளன.