1500 மில்லியன் பெறுமதியான சீனா உதவிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில்அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினைவலுப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்குஅமைய  சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய்பெறுமதியான உதவிப் பொருட்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதொடர்பான கலந்துரையாடல் இன்று( மே 23) நடைபெற்றது.

நிகழ்நிலை (Zoom) ஊடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில்திணைக்கள மாவட்ட பணிப்பாளர்களுக்கான ஆலோசனைகளை அமைச்சர்வழங்கினார்.

இவ் உதவிகளில் 500 மில்லின் பெறுமதியிலான மீன்பிடி வலைகள், 500 மில்லியன் பெறுமதியில் வீட்டுத் திட்டம், 500 மில்லின் பெறுமதியிலான அரிசிபோன்றவை சீன அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article