14 தமிழக மீனவர்கள் கடல்வழியாக யாழ்ப்பாணம் வருகை.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டியபோது பிடிக்கப்பட்டுநீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 14 படகுகளின்உரிமையாளர்கள் தங்கள் படகுகளை பார்வையிட கடல் வழியாக இன்று (ஓகஸ்ட் 25) யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய குற்றத்தில் நூற்றிற்கும் மேற்பட்டபடகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 89 படகுகள் அரசஉமையாக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 14 படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. எஞ்சியபடகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட  படகுகளின் உரிமையாளர்கள் 14 பேரும்  இன்றைய தினம் தனியான படகில் யாழ்ப்பாணம்  வருகை தந்து தமது படகுகளைபார்வையிட்டனர்.

இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வந்த விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகள் திருத்தம் செய்யும் நிலையில் உள்ளதா அல்லது கட்டி இழுத்துச் செல்லமுடியுமா என்பது தொடர்பில் பரிசீலித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வந்துள்ள தமிழக மீனவர்கள் இன்றும் நாளையும் தங்கியிருந்துபடகுகளைப் பரிசீலித்து நாளை மீண்டும் இராமேஸ்வரம் திரும்பிநீதிமன்றங்களால்  விடுவிக்கப்பட்ட 14 படகுகளில் நல்ல நிலையில் உள்ளபடகுகளை தமிழகம் எடுத்துச் செல்வதற்கான ஏறபாடுகளை மேற்கொள்வர் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.

இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வருகை தரும் படகு நடுக் கடலிற்கு வருகை தந்தபோது இலங்கை கடற்படையினர் அதனை காங்கேசன்துறைதுறைமுகம் வரையில் அழைத்துச் சென்று மயிலிட்டி துறைமுகத்தில் தரித்துவிடப்பட்டுள்ள படகுகளை பார்வையிட்டாதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article