எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலாகச் சூரிய உச்சம் கொடுக்கவுள்ளவுள்ளது. அதனால் வெப்பநிலை 35 பாகை செல்சியஸைத் தாண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய வளிமண்டலவியத் திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார்.
இந்த அதிகரித்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை தொடரும். சூரியன் வட துருவம் நோக்கிய பாதையில் நகரும் நிலையில் கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக அம்பாந்தோட்டை பகுதியில் உச்சம் கொண்டிருந்தது.
அங்கிருந்து சூரியன் நகர்ந்து வரும் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் யாழ். மாவட்டத்துக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. அதனால் 14 ஆம் திகதிக்கு பின்னர் 35 பாகை செல்சியஸை விட அதிகமாகக் காணப்படும். இது எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை தொடரும்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பிற்பகல் வேளையில் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.