SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் தற்போது பனை வளம் விரைவாக அருகிச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

மக்களுக்கான வீட்டுத் திட்டம் போன்றவற்றுக்காக பனையின்தேவை அதிகமாக உள்ளபோதிலும், புதிய பனைகளை உற்பத்தியாக்கும் செயற்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றன.

இந்நிலையினைக் கருத்தில் கொண்டு நெடுந்தீவில் தொடர்ச்சியாக தாவர நடுகையை ஊக்குவித்தும், முன்னெடுத்தும் வருகின்ற நெடுந்தீவை சேந்ந கனடாவில் வசிக்கும் திரு.சபா கணேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலில் இன்று (26 செப்டம்பர்) நெடுந்தீவு தெற்கு வெல்லையில் இருந்து ஈஞ்சடிப் பரவை வரையிலான, கடற்கரையை அண்டிய பகுதியில் முள்ளி, மற்றும் பற்றைகளின் நடுவில் முதல் கட்டமாக 200 பணம் விதைகள் தூவப்பட்டன.

இவ்விதைகள் முள்ளியையும் பற்றைகளையும் தமது அரணாகக் கொண்டு வளர்வதற்கான சாத்தியப்பாடுகள் நிரம்பியவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Share this Article