நெடுந்தீவில் வனப்பாது காப்பு திட்டத்தின் கீழ் தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவோமென வனஜீ வராசிகள் வன பாதுகாப்பு அமைச்சின் யாழ்.மாவட்ட பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (12 மார்ச்) அவர் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:
நெடுந்தீவில் தென்னை வனாந்தரத்தை உருவாக்கு வதற்கு வன ஜீவராசிகள் அமைச்சர் டிபீ ஏக்கநாயக்க அனுமதியை வழங்கி உள்ளார். இவ்வாறான நிலையில் யாழ்.மாவட்டத்தில் வனஜீவ ராசிகள் திணைக்களத்தின் கீழ் உள்ள காணிகளை அமைச் சின் அனுமதியுடன் தென்னை வனாந்தரமாக மாற்றுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதன் பிரகாரம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வன கிராமம் உருவாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவகத்தில் வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வாக கல்வி கற்ற இளைஞர்களை வனஜீ வராசிகள் திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு தீவக பாடசாலைகளில் அலுவலக உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கு வன ஜீவராசிகள் அமைச்சு ஊடாக நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தீவகத்தின் கடல் மற்றும் தரை மார்க்கப் போக்கு வரத்துகளை உரிய முறையில் மேற்கொள்வதற்காக துறைசார்ந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை நேரில் தீவகத்துக்கு அழைக்கவுள்ளோம் என்றார்.