கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந் தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை 11ம் மற்றும் 12ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 

எனினும் தற்போது நாட்டில் உள்ள கோவிட் இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் பெருவிழாவினை சிறப்பாக நடாத்து வதற்கு தீர்மானிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில் பெருவிழா சிறப்பாக இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக் கப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.

 

Share this Article