இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ரொனால்டோ வழங்கினார் என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
சமூகவலைத்தளங்களில்“ இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கிய ரொனால்டோ !!
“என இம் மாதம் 9 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (09.12.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
இலங்கையின் பிரதான ஊடகங்கள் நிதி நன்கொடைகள் மற்றும் மற்றைய நாடுகளால் வழங்கப்படும் ஆதரவை முன்னுரிமைப்படுத்தும் சூழலில், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ஒருவர் குறித்த நிதி உதவியை வழங்கினால், அது சர்வதேச ஊடகங்களிலும், முக்கிய ஊடகங்களிலும் முன்னணி செய்தியாக வெளிவந்திருக்க வேண்டும். இருப்பினும், ரொனால்டோ அல்லது அவரது தொண்டு நிறுவனம் இலங்கைக்கு இவ்வளவு பெரிய நிதி நன்கொடை அளித்ததாக எந்த ஊடகமும் தெரிவிக்கவில்லை.
அதன்படி, உண்மைகளை மேலும் சரிபார்க்க, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அனைத்து அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்யப்பட்ட போதும் அந்த கணக்குகள் எதிலும் அவர் இலங்கைக்கு எந்த நிதி உதவியும் வழங்கியதாக குறிப்பிடவில்லை.