நாடு முழுவதிலும் தற்போது பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் எதிர்வரும் 10ஆம் திகதி திறந்து வைக்கப்படுவதுடன், முப்படையினரால் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.