நடந்து முடிந்த பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட பெண்களில் 08 பெண்கள் மாத்திரமே பாரளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்டடனா. கடந்த பாரளுமன்றத்தில் 12 பெண்கள் அங்கம் வகித்த போதும் தற்போது பெண்கள் பங்கு பாரளுமன்றத்தில் குறைந்துள்ளது .
ஸ்ரீலங்கா பெரமுன கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி 06 பெண்களும் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநித்துவப்படுத்தி 02 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர்
குறிப்பாக வடகிழக்கில் எந்தவொரு பெண்களும் பாரளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை. பெண்கள் பாரளுமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பினை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும் வேட்பு மனுக்களில் பெண்களுக்கான பிரதி நிதித்துவம் வழங்கப்படுகின்ற போதும் பெண்கள் தேர்வு செய்யப்படுவது குறைவாகவே காணப்படுகின்றது.
08 பெண்கள் தெரிவு
கடந்த நாடாளுமன்றில் 12 பேர் தெரிவாகியிருந்தனர்.
பவித்ரா வன்னியாரச்சி – SLPP
முதித சொய்சா – SLPP
ராஜிகா விக்ரமசிங்க – SLPP
சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே – SLPP
கோகிலா குணவர்தன – SLPP
கீதா குமாரசிங்க – SLPP
தலதா அத்துகோரல – SJB
ரோஹிணி கவிரத்ன – SJB