நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியர்களும் சேவைகளில் இருந்து விலகி இன்று (பெப்ரவரி 8) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று அரச வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியால பணிப் புகிஷ்கரிப்பு முன்னெடுக்கின்றது. பணிப் புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் அவதியிற்றனர்.