வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் இன்றைய தினம் (24.12) வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

இக் கூட்டத்தில் வேலணை பிரதேச செயலக பிரிவில் ஏனைய திணைக்களங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் வேலணைப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஏனைய திணைக்களங்களின் ஆலோசனைகளும் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டு குறித்த விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் .த.அகிலன், வேலணை பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவலர்களும் கிராம மட்டத்தில் இயங்கும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.