வேலணை பிரதேச செயலத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சீரற்ற காலநிலை மற்றும் தொடரும் பருவகால மழைவீழ்ச்சி காரணமாக 352 குடும்பங்களைச் சேர்ந்த 1086 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 640 நபர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
143 குடும்பங்களைச் சேர்ந்த 424 நபர்கள் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான சமைத்த உணவுகள் கிராம சேவையாளர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.