வேலணை – துறையூர் பகுதியில் நேற்று (ஜனவரி 03) மாலை, பெரிய அளவில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தின்போது, குறித்த பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்ல முயன்றிருந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்குப் பின், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.