வேலணையில் தாய், மகள் மீது கத்திக்குத்து 

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வேலணை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13 மார்ச்) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது நபர் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனதுஉயிரை மாய்க்க முயன்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Share this Article