வேலணை பிரதேசத்தின் நீர் வள முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்பிரதேச செயலாளர் க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(ஜனவரி10) சிறிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சாட்டிப் பிரதேசத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நீரினைகட்டுப்படுத்தும் முகமாக கிணறு உரிமையாளர்கள் மற்றும் பவுசர்உரிமையாளர்களுக்கான அனுமதி மற்றும் உரிமம் பற்றிய ஆக்கபூர்பமானதீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், நீர்வளச் சபைஉத்தியோகத்தர்கள்,பொது சுகாதர வைத்திய அதிகாரி, சர்வோதயம் புங்குடுதீவு, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், சாட்டி மாதாகோவில் பங்குத்தந்தை, கிணறு உரிமையாளர்கள், பவுசர் உரிமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.