வேட்பாளர்களுக்கான விருப்ப எண்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

வேட்புமனுக்களின் அடிப்படையில், அவை தற்போது அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறும் செயல்முறை நேற்று (ஒக். 11) மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது.

மேலும், 22 மாவட்டங்களுக்கு 690 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் போட்டியிடவுள்ளதாகவும், 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share this Article