வெள்ளவத்தை விடுதியில் தாய்லாந்து பெண்கள் கைது !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெள்ளவத்தை பகுதியில் தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

மசாஜ் சென்ரர் என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஒரு விடுதியை கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றி வளைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஒரு விடுதியை நேற்று (12/02) இரவு, கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு ஒன்று சுற்றிவளைத்து, அதை நிர்வகித்த ஒரு சந்தேக நபரும், அங்கு தங்கியிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 36 மற்றும் 41 வயதுடைய தாய்லாந்து பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share this Article