கொழும்பில் வாடகை வீட்டில் சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த நபரிடம் 32 கடவுச் சீட்டுகள், 3 தேசிய அடையாள அட்டைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 9 உத்தியோகபூர்வ முத்திரைகள், 5 கிராம சேவை சான்றிதழ்கள், 9 பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ராகம – சிறிவர்தன வீதியில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறு வனம் ஒன்று இயங்கி வருவதாககொழும்பு துள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த வீடு 6 மாதங்களுக்கு முன்னர் 8,500 ரூபா வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.
இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக கூறிய, 3 லட்சம் ரூபா முதல் பெருந்தொகை பணம் சந்தேக நபரால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்து.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட – மஹரகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.