வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம்80 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 80 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு, இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைக்காதநிலையில் , இளைஞன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறைப்பாடுசெய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பணத்தினை பெற்றுக்கொண்டவரை கைது செய்து, விசாரணைகளின் பின்னர்நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதமன்றில் முற்படுத்திய போது , சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்