வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் தொழில் நிமித்தம் சென்றுள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள்ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது மக்களின் அரசாங்கம் ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைமுறையாக நிறைவேற்றுவோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புமற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராதெரிவித்தார்.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்கஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் புலம்பெயர்ந்தோர் அதேபோல் தமது சொந்தஇடங்களில் இருந்து வெளியேறி வாழ்பவர்களின் உரிமைகளுக்காகவே சர்வதேசபுலம்பெயர்ந்தோர் தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் போது புலம்பெயர்ந்தோர் அந்நிய செலாவணிஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்திருந்தால் நெருக்கடிமேலும் தீவிரமடைந்திருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும்தருவாயில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெறும் 3 பில்லியன்டொலர்களை காட்டிலும் புலம்பெயர்ந்து வாழும், தொழில் புரியும் எமதுஉறவுகளிடமிருந்து அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் குடும்ப பணஅனுப்பல்களின் பெறுமதி 4.48 பில்லியன் டொலர்களாக உள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் சற்றுபின்னடைவு காணப்பட்டாலும், ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையானகாலப்பகுதியில் குடும்ப பண அனுப்பலின் பெறுமதி 5,961.6 பில்லியன்டொலர்களாக உயர்வடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்இவர்களை மதிக்க வேண்டும். அவர்களின் உழைப்புக்கு உரிய கௌரவம்வழங்கப்பட வேண்டும்.
வாகன இறக்குமதியின் போது வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு விசேடசலுகை வழங்கப்படும் என்று கடந்த அரசாங்கம் குறிப்பிட்டது.இருப்பினும்இதனூடாகவும் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட ரீதியான முறையில் தென்கொரியாவுக்குஇலங்கையர்களை அனுப்புவதற்கு பதிலாக இ – 8 முறைமை ஊடாகஅனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனால் பல சிக்கல்கள்தோற்றம் பெற்றுள்ளன.இவ்விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம்விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கானவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள்ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது மக்களின் அரசாங்கம் ஆகவேமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம் என்றார்.