வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியல் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், தடை விதிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டும் இறக்குமதி செய்யலாம் என்று இறக்கு மதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி வகைகள், பால், வெண்ணெய், தயிர், பாலடைக் கட்டிகள், திராட்சை பழம், உலர் திராட்சை, அப்பிள் உள் ளிட்ட இறக்குமதியாகும் பழ வகைகள், உருளைக்கிழங்கு சார் நொறுக்குத் தீனிகள், மா வகைகள், சொக்லேட் வகைகள், பாஸ்தா, நூடில்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்.
குடிபான வகைகளில் அப்பிள், ஒரேஞ்ச் உள்ளிட்ட பழச்சாறு வகைகள், மினரல் வோட்டர், பியர் 350 மி.லீ. ரின் மற்றும் அதற்கு மேலான ரின் வகைகள், வைன், ரம், ஜின், வொட்கா, மதுசாரம் மற்றும் உற்சாக பானங்கள்.
சிகரெட், சுருட்டு வகைகள், புகையிலை சார் உற்பத்திப் பொருட்கள்.
தோல் பாதுகாப்புசார் கிறீம் வகை கள், உதட்டு சாயம், பவுடர்கள், கண்சார் அழகுபடுத்தல், உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள். சம்போ வகைகள், தலைமுடி ஸ்பிறே வகைகள். சவர்க்கார வகைகள். வாசனைத் திரவியங்கள்,
மெழுகுதிரி வகைகள், ரயர் வகைகள் மற்றும் சூட் கேஸ், கமெரா பெட்டிகள், சொப்பிங் பைகள் உள்ளிட்ட இறப்பர் பொருட்கள். கழுத்துப் பட்டி மற்றும் ஷம்போ, சப்பாத்து மற்றும் செருப்பு வகைகள், குடைகள், நிழல் குடைகள், தலைமுடி, உடை வகைகள்.
கண்ணாடி பொருட்கள், கரண்டி – முள்கரண்டி வகைகள், இறக்குமதியாகும் சமையலறை உபகரணங்கள், கழுவும் தொட்டிகள், குளிக்கும் தொட்டிகள், குளியலறை சுத்திகரிப்பான்கள், சலவை இயந்திரங்கள்.
வக்கியூம் பம்ஸ், வக்கியூம் கிளீனர்ஸ், கொம்பிரஷர் மற்றும் காற்றாடிகள், குளிரூட்டிகள் (ஏ.சி), குளிரூட்டி பெட்டி வகைகள், இலத்திரனியல் பொருட்களான மின் விளக்குகள், இலத்திரனியல் சூடேற்றிகள், தலைமுடி உலர்த்தி, மின் அழுத்திகள், தேநீர் – கோப்பி தயாரிப்பான்கள். றைஸ் குக்கர்ஸ், ரோஸ்டர்ஸ் வகைகள்.
தொலைபேசி வகைகள் மற்றும் அது சார் உபகரணங்கள். வானொலி, கணனி திரைகள், தொலைக்காட்சிகள், எல். இ.டி மின்குமிழ்கள் மற்றும் அலங்கார மின்விளக்குகள், மணிக்கூடு வகைகள், இசை சாதனங்கள் (தெரிவு செய்யப்பட் டவை), வீடியோ கேம்கள். டிஜிற்றல் கமெராக்கள், வாகனங்கள், சிறுவர்க ளுக்கான பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் என்பவற் றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.