பொலனறுவை- வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏறாவூர் பிரதான வீதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா அவர்கள் இன்று(செப்ரெம்பர் 30) அதிகாலை 3 மணிக்கு கடமை முடிந்து தனது அறைக்கு உறங்கச் சென்றவர் காலை 6 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தற்போது அவரது அறையில் இருந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது .
கையில் ஒரு பெரிய காயம் காணப்படுவதாகவும் அறை முழுவதும் இரத்தம் ஓடி காணப்படுவதுடன் அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் தடயவியல் பிரிவினர் துணையுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் ,
இடம்பெறும் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரிய வரலாம் என தெரிவிக்கப்படுகிறது.