வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ‘அமதிக்கரங்கள்’ விழிப்புணர்வு கவிதைப் போட்டி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமதிக்கரங்கள் அமைப்பு வீதி விபத்தைத் தடுக்கும் மாபெரும் விழிப்புணர்வுக் கவிதைப்போட்டியை நடாத்தவுள்ளது.

நாளுக்கு நாள் வீதி விபத்துகளால் உயிர்கள், அவயவங்கள் மற்றும் உடைமைகளின் இழப்பு அதிகரித்து வருவதனால் இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் முகமாக விழிப்புணர்வு கவிதைப் போட்டியை நடத்தவுள்ளது. இக்கவிதைப் போட்டிக்கு வீதி விபத்துகளைத் தடுப்பதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதான மரபு அல்லது புதுக் கவிதைகளை வயது வேறுபாடு இன்றி ஒருவர் ஒரு ஆக்கத்தை சமர்ப்பிக்க முடியும் போட்டிக்கான படைப்புக் களை கணினியில் தட்டச்சுச் செய்து எதிர்வரும் 28 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்பாக +94 769456755 என்ற வட்சப் இலக்கத்திற்கு அல்லது amathikarangal@gmail.com என்ற மின்னஞ்சொல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை நேரில் இயக்குநர், ‘அமதிக்கரங்கள்’-அவயவங்களை இழந்தவர்களுக்கான நலனோம்பு மையம், பனிக்கன்குளம், மாங்குளம். என்ற முகவரியில் அல்லது வேலை நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் +94 769456755 என்ற தொலைபேசியூடாக பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article