வீடுகள் கையளிப்ப நிகழ்வு இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சௌபாக்கியா வாரத்தில் வீடுகள் கையளிப்ப நிகழ்வு இடம் பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கியா

வாரத்தினை முன்னிட்டு இரண்டு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (டிசம்பர் – 18) இடம் பெற்றது.

ரூபாய் 200,000.00 மற்றும் ரூபாய் 600,000.00 பெறுமதியில் அமைக்கப்பட்ட விஷேட வீடுகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களது தலமையிலும், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திரு.ராஜ்பவன் அவர்களது நெறிப்படுத்தலிலும், இடம் பெற்றது.

வீட்டுத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் விஷேட அதீதியாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரது பிரதிநிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பொஜன பிரமுன நெடுந்தீவு அமைப்பாளர் பி.பற்றிக்றொசான், நெடுந்தீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணியாளர்,
சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ.பாமினி,பிரதேச பை உப தவிசாளர் திரு.ச.தொமஸ்செல்வராஜ், ஜே/05 கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்
Share this Article