விபத்தில் சிக்கிய இளைஞன் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடமராட்சி வியாபாரி மூலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தில் பணி புரியும் குறித்த உத்தியோகத்தர் பணி முடிந்து மன்னார் யாழ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் வியாபாரி மூலையினை சேர்ந்த வைரவநாதன் யசோதரன் (வயது 28) எனும் அரச உத்தியோகத்தரே உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றது.

Share this Article