வித்தியா கொலை வழக்கு: மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீட்டு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (நவம்பர் 06) நிறைவடைந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது. பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article