யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை வீதியில் விதாதா வள நிலைய உள்ளூர் உற்பத்திப்பொருட்களுக்கான விற்பனை நிலையம் நேற்று (மார்ச் 11) திறக்கப்பட்டது. விற்பனை நிலையத்தை வேலணை பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணம் நகரத்தில் இருந்து 7 கிலோமீற்றர் தூரத்தில் வேலணையில் இந்த விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இது உள்ளூர் உற்பத்திகள், ஆரோக்கிய உணவுகளை விற்பனை செய்யும் நிலையமாக செயற்படவுள்ளது.
இந்த நிகழ்வில் வேலணை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ந. பிரணவன், யாழ்.மாவட்ட விதாதா உத்தியோகத்தர் திருமதி கோமதி மாயக்கிருஷ்ணன், தொழில்துறை திணைக்கள யாழ்.மாவட்ட அலுவல நே.பிரதீபன், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஜெயக்குமாரன், வேலணைப் பிரதேச சமுர்த்தி வங்கி தலைமையக முகாமையாளர் திருமதி ஜெ.வசந்தி, மண்கும்பான் கிராம அலுவலர் திரு.வாகீசன், தொழில்துறை திணைக்கள வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர் ரி.விஜிதரன், வேலணை விதாதா வள உத்தியோகத்தர் சிவரஞ்சன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் திருமதி வி.சுபோஜா, வேலணை பிரதேச செயலக தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் திருமதி கி.பிரியந்தி, யாழ்.மாவட்ட விதாதா வள உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முயற்சியாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.